அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை இனிதாக செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 8 சனிக்கிழமை மற்றும் ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் ஆகும். எனவே மொத்தம் 4 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.