அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நீதியும் வராத காரணத்தினால் நிலைமையை எப்படி சமாளிப்பது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் தீவிரமாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் வீண் செலவுகளை எப்படி குறைப்பது என்பது பற்றி ஆராய்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் செயல்படாமல் அல்லது மந்தமாக இயங்கும் பொது துறை அலுவலகங்கள் பி டி ஆரின் நடவடிக்கைகளுக்கு இலக்காக இருக்கின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு முறையாக வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை தருவதற்கு தற்போது போதிய நிதி இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆகவும் அதன்பின் 59 லிருந்து 60 ஆகவும் உயர்த்தியிருந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான திமுக அரசு. ஆனால் இந்த முடிவு அப்போதே விமர்சனங்களை எழுப்பியது.
இந்த நிலையில் தற்போதைய நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி வயதை உயர்த்திக் கொண்டே சென்றால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமே என்கின்ற கேள்வியும் எழுந்து வருகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசும் இதே பாணியை கையாள இருப்பதாக கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். அதாவது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முடிவு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றாலும் தமிழக அரசுக்கு வேறு வழி இல்லையாம்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அப்போது மாநில அரசு ஊழியர்களும் ஊதிய உயர்வை எதிர்ப்பார்ப்பார்கள் அதனால் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அதனை செயல்படுத்துவதிலும் தற்போதைய சூழலில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்களை குளிர்விக்கும் விதமாக ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவதற்கான முடிவெடுத்திருப்பதாக விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அகவிலைப்படி உயர்வு போன்றவை சரியான கால இடைவெளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மாநில அரசு ஊழியர்களுக்கான பலன்கள் கிடைப்பதில் தான் இழுபறி இருக்கிறது. அதற்கான காரணம் மாநில அரசுகளின் நிதி ஒன்றிய அரசால் அணைகட்டபடுகின்றது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் ஒன்றிய அரசு நல்ல பிள்ளையாய் வேடமிட்டு கொள்கிறது என கோட்டை வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.