மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதிலிருந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தற்போது அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அகவிலைபடியானது தற்போது 8 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வினால் 1,04,600 அரசு ஊழியர்கள் மற்றும் 80,800 பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் மொத்தமாக 1.85 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில், அரசுக்கு கூடுதலாக 1,440.80 கோடி ரூபாய் வரை நிதி சுமை அதிகரிக்கும். மேலும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திறகுள் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில அரசு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .