Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு?…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கொரோணா பிரச்சனை காரணமாக அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு அகவிலைப்படியை அரசு உயர்த்தியது. அதன்படி இறுதியாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் அரசு தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பிட்மெண்ட் காரணி அடிப்படையில் சம்பளம் கணக்கிடப்படுகின்றது. இது உயர்த்தப்படும் போது சம்பளமும் ஊழியர்களுக்கு உயரக்கூடும்.

ஃபிட்மெண்ட் காரணி இப்போது 2.57 சதவீதமாக இருக்கிறது. இதில் அடிப்படை சம்பளம் 18,000 என்று வைத்துக் கணக்கிட்டால் மொத்த சம்பளம் ரூ.46,260.

அதாவது, 18000 x 2.57 = 46,260

ஒருவேளை ஃபிட்மெண்ட் காரணி 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால் மொத்த சம்பளம் 95,680 ரூபாயாக அதிகரிக்கும்,

அதாவது, 26000 x 3.68 = 95,680

மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது பணவீக்கம் அதிகமாக உள்ளதால் அதை பொருத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கிய பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த தகவல் ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |