Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?…. தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு?!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்திருந்தது. அதன்படி தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடு சரி செய்தல், ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், CPS ரத்து போன்றவற்றை கூறியிருந்தனர். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பின்படி அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் திமுக அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Categories

Tech |