Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. மோடி அரசின் திட்டம் என்ன….? வெளியான தகவல்…!!!

பட்ஜெட்டிற்கு முன்னதாகவே ஊழியர்களுக்கு புத்தாண்டு, சம்பள உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி காத்துள்ளது, புத்தாண்டில் அருமையான பரிசு வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தகுதியை அதிகரிக்க மோடி அரசுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது. இதன்மூலம் சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 26 ஆயிரம் ரூபாயை எட்டும். இந்த செய்தி பட்ஜெட்டுக்கு  முன்னதாகவே வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் தற்போதைக்கு எந்த கருத்தும் அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2.57 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பது பட்ஜெட்டுக்கு முன் அதாவது பிப்ரவரி 1ம் தேதிக்கு முன் அளிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் 6 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் வரை உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வை மத்திய அரசு மீண்டும் உயர்த்தினால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 26 ஆயிரம் ரூபாயை எட்டும். இது பணியாளர்களுக்கு மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Categories

Tech |