அரசு ஊழியர்களின் சம்பள விடுப்பு 300 நாட்களாக உயர்த்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வுகாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு இன்னொரு பெரிய பரிசை வழங்க இருக்கிறது. இந்த ஆண்டு முதல் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நடந்தால் அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் விடுமுறை கிடைக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின் அரசு ஊழியர்கள் சம்பள விடுப்பு 300 நாட்களாக உயர்த்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் அரசு ஊழியர்கள் 240 நாள் மட்டுமே சம்பள விடுப்பு பெற்று வருகின்றனர். புதிய தொழிலாளர் குறியீட்டில் இருந்து இது, 300 ஆக அதிகரிக்கும் என தெரிகிறது. தொழிலாளர்கள் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளுடன் புதிய தொழிலாளர் குறியீட்டு விதிகளில் மாற்றங்கள் செய்வது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஆண்டு விடுமுறை, ஓய்வூதியம்,pf போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் நான்கு குறியீடுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான புதிய விதிகளில் சம்பளம், சமூக பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, உடல்நலம் ,வேலை நிலை போன்ற அனைத்து அம்சங்களும் இடம் பெறுகின்றது. புதிய தொழிலாளர் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர்ரமேஷ்வர் தெலி கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருவதாகவும், பெரும்பாலான மாநிலங்கள் புதிய வரைவு விதிகளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சில மாநிலங்கள் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. புதிய தொழிலாளர் சட்டம் 2022ஆம் ஆண்டில் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.