ஓய்வு ஊதியம் வழங்க தாமதமானால் அதற்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் உரிமை என்றும், அவற்றை கொடுக்க தாமதம் ஆகும் நேரத்தில் அதற்கான வட்டி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதை தாமதப்படுத்தினால் அரசாங்கம் உரிய வட்டி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அரசு ஊழியர்கள் செய்யப்படும் சேவைகளுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது . ஊழியர்களின் சரியான உரிமை சட்டத்தின்படி செலுத்த வேண்டும். ஓய்வு ஊதியம் வழங்குவது என்பது ஓய்வூதியதாரர்கள் அரசுக்கு வழங்கப்பட்ட கால சேவை என்பதை நன்கு உணர வேண்டும். எனவே ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் சேவையை நிர்வாகிக்கும் உரிமை ஆகும். இதனால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதை தாமதப்படுத்தினால் அதற்கு உரிய வட்டி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.