Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு DA உயர்வை வழங்க தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் DA மத்திய அரசு ஊழியர்களின் 34 சதவீத DA க்கு சமமாக இருக்கிறது. அந்த வரிசையில் மகாராஷ்டிர அரசும் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்க இருக்கிறது. மகாராஷ்டிரா அரசு 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையின் 3-வது தவணையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இவற்றில் ஏற்கனவே 2 தவணைகளை அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அரசின் இந்த முடிவால் மகாராஷ்டிர அரசின் சுமார் 17 லட்சம் ஊழியர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். மகாராஷ்டிராவில் கடந்த 2019 ஆம் வருடத்தில் மாநில அரசு ஊழியர்களுடன் ஜில்லா பரிஷத் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக் குழு நடைமுறைபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை ஐந்தாண்டுகளிலும், சென்ற 2019-20ஆம் ஆண்டு முதல் ஐந்து தவணைகளிலும் வழங்க அரசு முடிவு செய்தது. இதன்கீழ் இதுவரையிலும் ஊழியர்களுக்கு 2 தவணைகள் கிடைத்துள்ளது. தற்போது 3-வது தவணை கிடைத்த பின், 4-வது மற்றும் ஐந்தாவது தவணைகள் வழங்கப்படும்.

அரசின் இந்த முடிவால் ஊழியர்கள் மிகவும் சிரமப்படும் நிலை இருக்கிறது. அரசு ஊழியர்களிடையே குரூப் ஏ அதிகாரிகள், 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் பலன் கிடைக்கும். அதே நேரம் குரூப் பி அதிகாரிகளுக்கு 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் பலன் கிடைக்கும். இதன்கீழ் குரூப் சி நபர்களுக்கு 10-15 ஆயிரம் ரூபாயும், நான்காம் பிரிவினருக்கு 8 முதல் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மகாராஷ்டிராவின் அரசு ஊழியர்கள் 31 சதவீத DA இன் பலனைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |