அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பாக அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சொர்ணா சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.
இந்த உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்று புகார் வருவதாக தெரிவித்துள்ள முதன்மை செயலாளர், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அடையாள அட்டை அணிவதன் தொடர்பாக துறை ரீதியான செயலாளரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.