மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து முடிவெடுக்கவுள்ளது. மத்திய மோடி அரசு அதி விரைவில் தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த முடிவை மேற்கொள்ளப்போவதாகல் செய்திகள் வெளியாகியது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் ஃபிட்மெண்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களின் சம்பளத்துக்கான பொருத்துதல் காரணியை அதிகரிக்கும் அழுத்தம் மத்திய அரசுக்கு உள்ளது. அண்மையில் அரசாங்கம் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது. அதன் மூலம் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஃபிட்மெண்ட் காரணியும் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் பலன் கிடைக்கும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000லிஇருந்து ரூ.26,000 ஆக உயரும். ஃபிட்மெண்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மெண்ட் காரணியின் கீழ் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,000 வரை உயரும். அதாவது குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக உயரும். ஃபிட்மெண்ட் காரணியை 3.68 ஆக உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக இருக்கும். அப்போது, ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலோவென்ஸ் தவிர்த்து, 2.57 ஃபிட்மெண்ட் காரணியின்படி ரூ.46,260 கிடைக்கும்.
அதாவது, 18,000 X 2.57 = 46,260
ஃபிட்மெண்ட் காரணி 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ. 95,680 ஆக உயரும்.
அதாவது, 26000X3.68 = 95,680