மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் 7,00,000 அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஒரு பரிசு தொகை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 31 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி டிஏ நிலுவைத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த டிஏ தொகையை அரசு மொத்தமாக வழங்கலாம் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.
இதன்மூலம் அரசு ஊழியர்கள் 2,00,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 1-ஆம் தேதி 2019 நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 31.43 லட்சமாக இருந்தது. இவர்களுக்கு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 18 மாதங்களாக டிஏ கட்டணம் வழங்கவில்லை. அண்மைக்கால செய்திகளின்படி, இந்த ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு இந்த மாதம் வழங்கினால் ஒரே நேரத்தில் 2,00,000 ரூபாய்க்கு மேல் பலன் கிடைக்கும்.
இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களும் 7-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியில் பலனை பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இது தொடர்பாக பெறப்பட்டுள்ள செய்தியின்படி, மாநில அரசு அகவிலைப்படியை 5 சதவிகிதம் உயர்த்தலாம். இதனால் மாநில அரசு ஊழியர்களுக்கு 12 சதவிகிதம் அகவிலைப்படி டிஏ தொகை கிடைக்கும். ஊழியர்களின் சம்பளம் உயரும். இது தவிர level-1 ஊழியர்களின் ஊதிய நிலுவைத் தொகை 11,880 ரூபாய் முதல் 37,554 ரூபாய் வரையும், லெவல்-13 இல் உள்ள ஊழியர்களுக்கு 1,44,200 முதல் 2,18 ,200 டிஏ நிலுவைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.