மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இந்த வருடம் அகலவிலைப்படி கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.அதனால் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது அகலவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்தி டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் டெல்லி நிதித்துறை விவரங்களை அனுப்பி உள்ள நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.அதனைப் போலவே ராஜஸ்தான் மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி 38 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.