இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால், இதனை சமாளிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 18 மாதம் கால நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கொரோனா தொற்று குறையத் தொடங்கிய பின் அகவிலைப்படிஉயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் 31 சதவீதம் அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர்.
பொதுவாக அகவிலைப்படி உயர்வு வருடத்துக்கு இருமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தொடங்கியதில் இருந்து இதுவரை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் 18 மாதம் கால நிலுவைத்தொகையும் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஹோலி பண்டிகையையொட்டி மார்ச் மாதம் 18ஆம் தேதி அன்று அகவிலைப்படி, நிலுவைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்தது. ஆனால் இதுவரையிலும் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்ற சில நாட்களாக இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்பின் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்போது நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அடுத்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.