புதிய அறிவிப்புகள் மூலமாக அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் பால் வார்த்து உள்ளார் முதலமைச்சர் என்று சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியுள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதில் இடம்பெற்றிருந்ததாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்துவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60ஆக நீட்டிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிகள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார். இவை அனைத்தும் அரசு ஊழியர்களுக்குகிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய அறிவிப்புகள் மூலமாக அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் பால் வார்த்து உள்ளார் முதலமைச்சர் என்று சட்டப்பேரவையில் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.