Categories
தேசிய செய்திகள்

அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு…. புதிய கட்டுப்பாடுகள் அமல்… மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசும் தனது பல்வேறு அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதன்படி மத்திய அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே நேரடியாக பணிக்கு வரவேண்டும் என்றும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோர் அலுவலகத்திற்கு நேரிடையாக வருவதற்கு விலக்கு அளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். மேலும் எந்த சூழ்நிலையிலும் அலுவலகங்களில் கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |