Categories
மாநில செய்திகள்

அரசு அதிகாரிகளை பந்தாடும் தமிழக அரசு….. சீமான் கடும் கண்டனம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அரசு துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளைப் பந்தாடும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். நாளுக்கு நாள் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து பந்தாடி வருவது அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

அதிலும் குறிப்பாக சுகாதாரத்துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நிர்வாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத் உடனுக்குடன் இடமாற்றம் செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை தமிழக அரசு உணரத் தவறியது ஏன் என தெரியவில்லை. அரசியல் காழ்புணர்ச்சிகளை கைவிட்டு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.பழிவாங்கும் நோக்கோடு அதிகாரிகளை பந்தாடுவது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பின்னடைவை விளைவிக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |