மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டம் என்பது கடந்த ஏப்ரல் மாதம் பெண்கள் உயர் கல்வித் திட்டமாகி உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்கான மாற்றம். உயர்கல்வியில் எந்த பிரிவு என்றாலும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவிகள் தங்கள் கல்லூரி மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோர் வருமானம் மற்றும் மதிப்பெண்கள் என எந்த கட்டுப்பாடுகளும் இதற்கு கிடையாது.
மாணவிகள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். எனவே விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளும் பட்டயப் படிப்பு மற்றும் தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம்தோறும் 1000 ரூபாய் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.