தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றுவதற்கு போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி வாய்ந்த நபர்கள் பலரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதில் 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது என்று குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கான விரிவுரையாளர் பணிக்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆனால் அதற்கு முந்தைய நிலை பணியாளர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி அளவில் சரியான விகிதாசாரத்தில் ஆசிரியர்களை நியமிக்க ஆண்டுதோறும் ஆசிரியர் நியமனம் செய்ய தமிழக அரசுக்கு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயம் தார்மீக உரிமை இல்லை என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து பொதுப்பிரிவினருக்கு 40 வயதில் இருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் வயது வரம்பை உயர்த்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் படி உச்ச வயது வரம்பை உயர்த்தியும் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது எம்பிஇடி கல்வித்தகுதி ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் பதிவேற்றம் செய்யவும் முதுநிலை பட்டப்படிப்பு முதல் வருடம் படித்த பிறகு பி எட்பட்டம் முடித்து அதற்கு பிறகு முதுநிலை படிப்பு இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் பெற்றவர்கள் ஆகியோர் தங்களது கல்வித் தகுதியை பதிவேற்றம் செய்யும் வகையில் மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.