தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் காலை சிற்றுண்டியுடன் தினமும் ஒரு குவளை பால் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.