Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. சென்னையில் முதன்முறையாக…. அரசு செம சூப்பர்…!!!!

சென்னையில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேக அரசுப்பேருந்து இயக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கண்ணகி நகர், பெருகம்பாக்கம் பகுதியிலிருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பல மணி நேரமாக பேருந்துக்கு காத்திருந்து செல்வதால் சிரமம் அடைந்து வந்தனர். எனவே மாணவர்களுக்கு என பிரத்யேக பேருந்து வசதி ஏற்பாடு செய்தால் உதவியாக இருப்பதுடன், பள்ளி மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆழ்வார்பேட்டை முதல் பெரும்பாக்கம் வரை காலை மற்றும் மாலையில் தமிழக அரசு போக்குவரத்து வசதி செய்துள்ளது. அதன்படி கண்ணகி நகர் ,பெருகம்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து நந்தனத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் வந்து செல்வதற்கு சிரமப்பட்ட மாணவர்கள் அரசின் பிரத்தியேக பேருந்தில் உற்சாகத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |