Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு சொந்தமான இடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு நிலங்களை ஆக்கிரமித்த கல்லூரி நிர்வாகம் மீது அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் மொத்தம்  28 கட்டிடங்களை கட்டியுள்ளது. அந்த இடங்களில் கட்டிய கட்டிடங்களை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த வருடம் கல்லூரியில் படித்த மாணவர்கள் தங்களது படிப்பை அரசாங்கம் கருத்தில் கொண்டு கட்டிடத்தை இடிக்ககூடாது என அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு கொடுத்துள்ளனர். இதற்காக  மாவட்ட ஆட்சியர் சுகன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழு இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தற்போது பதவியேற்ற தி.மு.க அரசு புதிதாக ஒரு குழுவை நியமித்து பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல்  கலெக்டர் சுகபுத்திரா, கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் சாஸ்திரா பல்கலைக்கழக நிறுவனத்திடம் 4 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி  அரசிடம் ஒப்படைக்குமாறு  நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்த நோட்டீஸ் கல்லூரியின் நுழைவு வாயிலிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி அரசு நிலத்தை ஒப்படைக்காவிட்டால் அரசு சார்பில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |