அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் 51 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்
நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருட்டுத் தடுப்பு காவல் துறையினருக்கு எதிராக தீவிர போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த காவல் துறையினர் அவர்களது அதிகாரத்தை உபயோகப்படுத்தி அச்சுறுத்தல், கொடுமை, கொலை போன்றவற்றை செய்வதாக குற்றச்சாட்டு முன்வைத்து மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் நகரில் போராட்டம் நடந்த போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்நாட்டு அதிபர் முகமது புகாரி மௌனம் கலைத்து 51 பொதுமக்களும் 11 காவல்துறை அதிகாரிகளும் மரணமடைந்ததாக தெரிவித்ததோடு பொதுமக்களிடம் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு படையினர் வன்முறைகளைப் பார்த்து கொண்டு கைகட்டி நிற்க மாட்டார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.