மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “பாஜகவில் நான் இணைய போகிறேனோ என்ற கேள்விக்கு இடமில்லை. தனியாக எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும்.
விஜய்யை மக்கள் அழைக்கும்போது அவர் அரசியலுக்கு வருவார். மக்கள் அழைக்கும் போது வருவதுதான் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும். தற்போது முழுக்கவனத்தையும் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்துவதில் செலுத்தி வருகிறேன். பாஜகவுடன் இணைவது என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை” எனக் கூறியுள்ளார்.