Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு வருவேன்….. அவர்கள் கூப்பிட்டால்…. லெஜெண்ட் சரவணன் தடாலடி…!!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்ற ஐந்து மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் லேஜெண்ட் சரவணன் இளமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வருவேன் என நடிகர் லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், தான் அடுத்த படத்தில் நடித்துகொண்டிருப்பதாகவும், இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றார். அதன்பிறகு அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, அதை மக்களும், மகேசனும்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் கூப்பிட்டால் வருவேன் என கூறினார். பின் தமிழகத்தில் ஆட்சி நன்றாக சிறப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |