அரசியலுக்கு சீமான் குழந்தை என கொளத்தூர் மணி கிண்டலத்துத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, கன்னியாகுமரி மாவட்டத்தையும் தன்னோடு இணைத்துக் கொண்ட நவம்பர் 1ஆம் நாளினை தாயக தமிழ்நாடு நாளாக விழாவாக, கலை நிகழ்ச்சிகளோடு முன்னெடுக்க முடிவு செய்து இருக்கிறோம்.
எங்களுடைய பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் தலைமை குழு உறுப்பினராக இருக்கக் கூடிய தோழர் குடந்தை அரசன் மீது கூட நேற்று காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் அவர் வீட்டிற்குள் நுழைந்து அவரை தேடுவதும், தம்பியை அழைத்துச் செல்வதுமான வரம்புமீறி நடந்து கொள்ளுகின்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
சீமான் போன்ற அரசியல் குழந்தைகளும், அரசியல் அனுபவமிக்க மணியரசன் போன்றவர்கள் சூழ்ச்சிகரமாகவும் இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட முன்னெடுப்பு எடுத்தவர்கள் தோற்றுப்போனார்களோ அதே போல இவர்களும் அதில் வெற்றிபெற முடியாது.
இந்த காலகட்டத்தில் பல சமூக நீதி முன்னெடுப்புகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்ற தமிழ்நாடு மாநில அளவில் ஆணவபடுகொலை தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும், ஜாதி மறுப்பு இணையர்களுடைய குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீட்டை ஜாதி மறுத்தோர், ஜாதியற்றோர் என்ற பெயரில் அவர்களுக்கான தனி ஒதுக்கீட்டையும் கொடுப்பதன் வழியாக அப்படிப்பட்ட ஜாதி கடந்த திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம் என தெரிவித்தார்.