அரசியலுக்கு இடையூறாக சினிமா இருந்தால் அதை விட்டு விடுவேன் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டிபோட்டு இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். நாளை பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் என் சினிமா வாழ்க்கை அரசியலுக்கு இடையூறாக இருந்தால் அவற்றை விட்டு விடுவேன் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன். அதே நேரத்தில் அரசியலுக்கு சினிமா இடையூறாக இருக்கும் பட்சத்தில் அந்த சினிமா வாழ்க்கையை உதறி விடுவேன் என்று கூறினார்.