சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் இன்று நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையும் மாணவர் சந்திரசேகர் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டமானது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. இதில்
மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் கள்ளகுறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.