Categories
அரசியல்

அரசியலில் இறங்காதிங்க…. தாங்க மாட்டிங்க…. ரஜினிக்கு அறிவுறுத்திய சீமான்…!!

நடிகர் ரஜினிகாந்த் அவச்சொற்களை தாங்காமாட்டார் என்பதால் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

சீமான் சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது என்று நடிகர் ரஜினி அவர்கள் வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்று தெரிவித்தாரோ  அன்று அவரிடமிருந்த முரண்பாடு நீங்கி விட்டது. நான் ரஜினிக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் அரசியலில் அவர் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வந்த அவர் நாங்கள் பார்ப்பது போன்ற அவச்சொற்களை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் கிளீன் இந்தியா இருக்கிறது. ஆனால் கிரீன் இந்தியா இல்லை. மனிதனுக்கு மரங்கள் தேவை ஆனால் 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி மரத்தை நடுவதற்கு ஆன முயற்சியை எடுக்கவில்லை.

ராமர் கோவில் கட்டுவதற்கு கல் கொண்டு வர சொன்ன நம் நாட்டின் பிரதமர் மரம் நடுவதற்கு அறிவுறுத்தவில்லை. வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணியை மக்களுடன் அமைத்துள்ளது. சில கட்சிகள் முரண்பாடுகள் இருந்தாலும் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள் .ஆனால் நாம் எப்போதும் தனித்து போட்டியிடுவோம் விரைவாக வேட்பாளர்கள் பற்றி அறிவிக்கப்படும். மனித குலத்தின் எதிரி பாஜக, காங்கிரஸ் இனத்தின் எதிரி. நீதிமன்றம், தேர்தல் ஆணையம். சிபிஐ அமைப்புகள் போன்றவை பிரதமரின் கைவிரல்கள் போன்றது. அவர் சொன்னால் நீட்டும் அவர் சொன்னால் மடக்கும்” எனக் கூறியுள்ளார்

Categories

Tech |