விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தேமுதிகவை தேர்தலுக்கு தயார்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் செயல் தலைவராக பிரேமலதா பொறுப்பு ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் முடங்கியுள்ளதால் வரும் மக்களவை தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக மாநில நிர்வாகிகள், செயலாளர்களிடம் அவர் ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் விரைவில் இது பற்றி அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இனி கேப்டன் அரசியலில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.