காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பாஜக அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்கு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்கிறது. இதனை இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த நடைவணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், திக்விஜய்சிங், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.