மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டிகள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது.
இந்நிலையில் நீலகிரியில் புதுவகையான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மது பாட்டில்களின் விலையும் ரூ.10 அதிகமாக விற்கப்படும். மது அருந்தியபின் பாட்டில்களை தூக்கி வீசாமல் மதுக்கடைகளில் ஒப்படைத்தால் அதிகமாக வசூலிக்கப்பட்ட பத்து ரூபாய் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.