மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் எளிதாக பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்க எண்கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயிகள் நல நிதித் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் அனைத்திலும் விவசாயிகள் எளிதாக பயன் பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் பற்றிய தகவல்களை அனைத்தும் சேகரித்து புதிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகின்றது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக திட்டமிடவும் இதுஉதவும். இத்திட்டத்தின் கீழ் 8 கோடி விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள். அதன்பின், விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.