Categories
தேசிய செய்திகள்

அரசின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு…..மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது மாணவர் சேர்க்கை….!!

மேற்குவங்காளத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேற்குவங்காளத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பெரும் தொற்று காரணமாக மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு பாதிப்புகள் படிப்படியாக குறையவே தற்போது மீண்டும் மாணவர்கள் சேர்க்கை பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பள்ளியில் படித்து அரசு பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நிறைவுபெற்றது எனில் சேர்க்கைக்காக வரும் மாணவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது அவர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |