அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தை அடுத்த இருக்கும் மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் குறுகலாக உள்ள பகுதியின் வழியே பேருந்துகள், வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக சரிவான சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது.
இந்த இடத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளானதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சென்ற சில நாட்களாக மழை பெய்வதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்தின் சக்கரம் அந்த பள்ளத்தில் சிக்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் அதை சரி செய்தார்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பின் சரி செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.