செய்தியாளர்களிடம் அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க குழு போடப்பட்டு, மிக மிக மரியாதையாக கூட்டணியில் அரவணைக்கும் வகையில் அரவணைச்சோம். யார் யாருக்கு என்ன பலம் ? அந்த பலத்தின் அடிப்படையிலே பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றது.
கூட்டணி பேச்சுவாரத்தை நடைபெற்று இருக்குற சூழ்நிலையில தேமுதிக போயிடுது நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களை பொறுத்தவரையில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற பாங்கு தான். தேமுதிக கூட்டணியை விட்டு விலகி போறேன்னு சொன்னீங்க, போயிட்டீங்க. தேமுதிக கூட்டணியில் இருந்து போனது, அவர்களுக்கு பெரிய துரதிஷ்டம், எங்களுக்கு துரதிஷ்டம் கிடையாது.
நான் என்ன சொன்னேன் ? நண்பர்களாக இருந்தோம், இன்றைக்கும் நீங்க எங்கிருந்தாலும் வாழ்கனு தான் சொல்லிட்டு இருக்கேன். எங்களுடைய பக்குவம் அது, நாங்க யாரையுமே குறை சொல்றது கிடையாது. அந்த மாதிரி பக்குவத்தை முதல்ல தேமுதிகா வளத்துக்கணும்.
நேற்றுவரை ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு, கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு, கூட்டணி விட்டு போய்ட்டா ஒரு பேச்சு. இதெல்லாம்… மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேசு…. கீழே இறங்கி வந்தாக்கா சொன்னதெல்லாம் போச்சுன்னு…. அந்த மாதிரி இதெல்லாம் இருக்கு. இதையெல்லாம் பெருசா பொருட்படுத்த வேண்டியதில்லை என அமைச்சர் கூறினார்.