நவராத்திரியை முன்னிட்டு மும்பை விரார் குளோபல் சிட்டியில் தாண்டியா நடனமாடிய மணிஷ் என்பவர் திடீரென மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது செய்தியை கேட்ட அவரின் தந்தை நரப்ஜியும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரது மரணத்திற்கும் மாரடைப்பு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதே போல மும்பை அருகே டோம்பிவலியில் தாண்டியா நடனத்தில் ரிஷப்(27) என்பவரும் கலந்துகொண்டு ஆடினார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்த நிலையில் உடனே அவரை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனையிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.