Categories
தேசிய செய்திகள்

அய்யோ!…. சிறுவனை உயிரோடு விழுங்கிய முதலை…. பயங்கர சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தின் ஷியோபோர் கிராமத்தில் உள்ள சம்பல் ஆற்றில் குளிப்பதற்காக 10 வயது சிறுவன் சென்றான். அப்போது ஆற்றில் இருந்த ராட்சத முதலை சிறுவனை கவி ஆத்துக்குள் இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர்காரர்கள் சிறுவனின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு கிராமத்தினர் வலை, கயிறுகள் உதவியுடன் முதலையை பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வனத்துறையினரும் போலீசாரும் அங்கு வந்தனர்.

இதனையடுத்து அவர்கள் முதலையை கிராம மக்கள் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சித்தனர். ஆனால் முதலை வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பார் என்ற நம்பிக்கையில் கிராமத்தினர் முதலை சிறுவனை கக்கு வரை விடமாட்டோம் எனக் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர் அவர்களிடம் இருந்து முதலையை மீட்டு சென்றனர். அவர்கள் சிறுவனின் கதி என்னவென்று தெரியவில்லை.

Categories

Tech |