ஜார்கண்ட் மாநிலத்தில் தனது வீட்டில் வேலை பார்த்த பெண்ணை சித்திரவதை செய்ததாக பாஜக தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பழங்குடியின பெண் சுனிதா, சீமா பத்ராவின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.ரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீமா அவரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சுனிதாவை மீட்டனர். அதன் பிறகு போலீசாரிடம் சுனிதா, சீமா தனது உடலில் சூடு வைத்ததாகவும் சிறுநீரை நக்க வைத்ததாகவும், நாக்கால் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.