Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அய்யய்யோ..! லட்டு கேட்சை கோட்டை விட்ட பின் சிரித்த கோலி…. அஸ்வின் ஷாக்…. தலையில் கை வைத்த ரோஹித்… என்னதான் நடந்துச்சு..!!

12வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரமின் கேட்சை விராட் கோலி கைவிட்ட பின் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் ஷாக் ஆனார்..

டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) விராட் கோலி (12) மூன்று பேரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினர். இருப்பினும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 40 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 68 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. இதையடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்கம் சரியில்லை என்றாலும், எய்டன் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். தென்னாபிரிக்க அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்ரம் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். மேலும் டேவிட் மில்லர் அவுட் ஆகாமல் 46 பந்துகளில் 59* ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இந்த போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்யும் போது செய்த சில தவறுகளை செய்தது. அதனாலேயே வெற்றியை கோட்டை விட்டது என்றே சொல்லலாம். போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கிங் கோலி கேட்ச் ஒன்றை விட்டிருப்பார். அதாவது தென்னாப்பிரிக்கா பேட்டிங் போது எய்டன் மார்க்ரம் அஸ்வின் வீசிய 12ஆவது ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேச்சை விராட் கோலி கைநழுவி விட்டுவிட்டார். கேட்ச் விட்ட பின் கோலி சிரித்தபடியே நடந்துவந்தார். அப்போது மார்க்ரம் 35 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின் தான் அவர் 52 ரன்கள் வரை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பீல்டிங்கில் எப்போதும் சிம்மசொப்பனமாக விளங்கும் விராட் கோலி அந்த கேட்சை விட்டதை யாராலும் நம்பமுடியவில்லை. அப்போது அஸ்வின் கையை விரித்து ஒரு விதமாக கோலியை பார்த்தார். அதே போல ரோஹித் சர்மாவும் தலை மேல் கை வைத்தார். இவர்களது இருவரது  ரியாக்ஷனும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல கோலி கேட்சை விட்ட பின்னர் ரோஹித் ஷர்மாவும் ஒரு  எளிதான ரன்-அவுட்டைத் தவறவிட்டார். இதுவும் வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் கோலி வேண்டுமென்று தான் கேச்சைவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் இப்போட்டியில் இந்தியா ஜெயித்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு செல்லும் கடைசி வாய்ப்பு இருக்கும். எனவே இப்போட்டியில் இருவருமே கேட்சை விட்டதாக இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/MalikMuzammil75/status/1586729385461170178

வீடியோ :

https://twitter.com/zihadhasan85/status/1586734038144151553

Categories

Tech |