Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ பொங்கல்பரிசு ரூ.2500 கிடைக்காதா?… தமிழக மக்களுக்கு ஷாக்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கா விட்டால் பொங்கல் பரிசு வழங்காமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை யுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு வழங்கு வதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் 30-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று செய்யப்பட உள்ளது.

பொங்கல் பணம் 2500 ரூபாய் ஜனவரி 4ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி கோழி கூட்டுறவு மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் புறக்கணிப்போம் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதனால் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |