Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… நகை கடன் தள்ளுபடி… புதிய பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் நகைகளை அடமானம் வைக்க கனரா வங்கி முன்பு பொது மக்கள் கூட்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகளை அதிமுக அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் பகுதியில், தற்போது நகைகளை அடகு வைத்தால் தேர்தல் முடிந்த பிறகு கடன் தள்ளுபடி செய்யப்படும் என வதந்தி பரவியுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள கனரா வங்கி முன்பு பொது மக்கள் கூட்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இதேபோல் மக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து வருகின்றனர். ஆனால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை 6 சவரன் நகைகளை அடமானம் வைத்து அவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி பொருந்தும்.

Categories

Tech |