Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அய்யய்யோ…. எங்க ஊர் எம்எல்ஏவை காணவில்லை…. கண்டுபிடித்து குடுங்க…. பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை அடுத்த நாங்கு நேரியில் எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி.மனோகரன். நான்குநேரி தொகுதியை தமிழகத்தின் முன்னணி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தவர்  ரூபி.மனோகரன் என்றும், போக்குவரத்து பிரச்சனை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் வில்லுக்கு விஜயன் சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லை தவறமாட்டார் என்று வாக்குறுதி அளித்த ரூபி. ஆர்.மனோகரனை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம்  வழங்கப்படும் என்று வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகர்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |