உக்ரைனில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு அளிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ்-க்கு அருகில் கலினிவ்கா என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கில் இருந்து மத்திய உக்ரைனில் உள்ள ஆயுத படைகளின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய படைகள் நேற்று மாலை கடல் பகுதியில் இருந்து கப்பல் வழியாக காலிபர் ஏவுகணை முலம் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். இந்த தாக்குதலில் அந்த எண்ணேய் கிடங்கு முழுவதும் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கொனோஷென்கோவ் கூறியுள்ளார்.