Categories
உலக செய்திகள்

அய்யய்யோ ஆபத்து….!! மனித இரத்தத்தில் இது கலந்திருக்கா….? விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்….!!

விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.  இந்த ஆய்வுக்கு உட்படுத்திய              50 சதவிகிதம் ரத்த மாதிரிகளில் குளிர்பானங்களில் அடைத்து விற்கப்படும் பெட் பாட்டில்களில் நுண்துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து  கூறியதை சர்வதேச சுற்றுச்சூழல் அறிவியல் பத்திரிக்கையில் ஆய்வுக் கட்டுரையின் மூலம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ரத்த பரிசோதனைக்கு பயன்படுத்திய 22 ரத்த மாதிரிகளில் ஏதோ ஒரு வகையான பிளாஸ்டிக் கழிவுகள்  80 சதவிகிதம்  இருப்பதை கூறுகின்றனர்.  இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காற்று, குடிநீர், உணவு மூலமாகவும் உடலுக்குள் புகுந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இதனைத்தொடர்ந்து டுத் பேஸ்ட்,  லிப் கிளாஸ் பயன்படுத்துவதன் மூலமும் ரத்தத்தில் கலந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

Categories

Tech |