நடிகை எமி ஜாக்ஸன் உக்ரைனில் உள்ள மக்கள் குறித்தும் பச்சிளம் குழந்தைகளின் நிலைமையை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்ஸன். இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், மதராசபட்டினம், தெறி, கெத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்தும், மேலும் அங்கிருக்கும் மக்கள் கஷ்டப்படுவது மற்றும் போதிய வசதிகள் இன்றி பச்சிளம் குழந்தைகள் வார்டில் உள்ள வீடியோக்கள் குறித்தும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/Cab9tlrry1y/?utm_source=ig_web_copy_link
மேலும் உக்ரேன் மக்களுக்காக நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக நடிகை எமி ஜாக்ஸன் அந்த பதிவில் கூறியதாவது. “உக்ரேனில் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை. உக்ரைன் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவசர நிதி உதவி தேவை. தயவு செய்து எனது பயோவில் உள்ள இணைப்பின் மூலம் நன்கொடை அளிக்கவும்” என்று கூறியுள்ளார்