பிரான்ஸ் நாட்டில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் தீப்பிடித்து விமானி பத்திரமாக தரை இறக்கினர் .
ஜனவரி 21 ஆம் தேதி அன்று பாரிஸிலிருந்து பிரான்சில் பெர்பிஞன் என்னும் இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் இஞ்சின்களில் ஒன்று வெடித்தது. இதனால் 2 மீட்டர் உயரத்திற்கு இறக்கையில் அடியில் தீப்பிடித்து எரிவதை கண்டு பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனே புறப்பட்ட இடத்துக்கே சென்று விமானத்தை விமானி தரை இறக்கினார். அதனால் அதிலிருந்த 48 பயணிகளும் உயிர் பிழைத்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்ஜினில் தீ பிடித்ததாக ஏர்பிரான்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்