உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருப்பதி கோவில் முழுமையாக திறக்கப்பட்டு தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து திருமலை திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் பக்தர்களின் வகைக்கேற்ப பிரசாதம் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தரிசன டிக்கெட்களுக்கான கட்டணம் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கு TTD உயர்த்தவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா கூறுகையில் “சமீபத்தில் நடத்தப்பட்ட TTD போர்டு கூட்டத்தில் வழக்கமான விவாதம் தான் நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் திருமலை ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் திருமலை திருப்பதி ஓட்டல் உரிமையாளர்கள் இந்த அறிவிப்பால் நிம்மதி அடைந்துள்ளனர்.