Categories
உலக செய்திகள்

அய்யயோ..!! சீக்கிரம் படி.. அப்பா வராங்க… புத்திசாலி நாயின் அறிவுரை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமையை செல்ல பிராணி நாய் ஒன்று சிறுமியின் தந்தை வருகையை கண்டு படிக்கும்படி அறிவுறுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. யோக் என்னும் பெயரில் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் முன் சிறுமி கையில் ரிமோட்டுடன் அமர்ந்தபடி இருக்கிறார். இந்நிலையில் கீழே தரையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று படுத்து கிடக்கிறது.

இதனையடுத்து திடீரென அந்த நாய் எழுந்து வாசலை நோக்கி குரைக்கிறது. அதன் பின் சிறுமி இருக்கும் பக்கம் மெல்ல திரும்பி மேஜையின் மீது கை வைத்து படிக்க தொடங்கு என்பது போல அறிவுறுத்துகிறது. ஏனென்றால் அந்த மேஜையின் மீது சிறுமியின் வீட்டு பாடத்திற்கான நோட்டுப் புத்தகங்கள் உள்ளது. அந்த நாய் அறிவுறுத்திய உடனே அவசர அவசரமாக ரிமோட்டை வைத்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சிறுமி மேஜை முன் அமர்ந்து வேகமுடன் எழுதும் வேலையை தொடங்கி விடுகிறார்.

சரியாக சிறுமியின் தந்தை கதவை திறந்து வீட்டிற்குள் நுழைகிறார். அதன் பின் நேராக பக்கத்தில் உள்ள அறைக்கு செல்கிறார். அவரை நெருங்கிய படி வரவேற்க சென்ற நாய் அவர் அறைக்கு செல்லும் வரை பின்னாலேயே சென்று விட்டு திரும்புகிறது. சில வினாடிகளே ஓடும் இந்த வீடியோ 11 லட்சம் முறை பார்வையிடப்பட்டிருக்கிறது. பலரும் இந்த புத்திசாலித்தன நாயின் செயலை பாராட்டி விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |