அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளின்போது எடுக்கப்பட்டதாக கூறி இரண்டு முதற்கட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. அந்தப் புகைப்படங்கள் உண்மையிலேயே ராமர் கோவில் கட்டுமான பணிகளின் போது தான் எடுக்கப்பட்டதா என்று கூறி பலரும் தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதன்பிறகு அந்த புகைப்படங்களை ஆய்வு செய்ததில் அவை வாரணாசியில் கட்டப்பட்டுவரும் காசி விஸ்வநாதர் திருக்கோவில் கட்டுமானப் பணிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரியவந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு செய்தி தொகுப்புகள் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளன. அதன்படி வைரலாகும் புகைப்படங்கள் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளின்போது எடுக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.